Theme Check

ஆசிய கோப்பை ஹாக்கி- இந்திய அணியில் 2 தமிழக வீரர்கள் !!

ஆசிய கோப்பை ஹாக்கி- இந்திய அணியில் 2 தமிழக வீரர்கள் !!

ஆசிய கோப்பை ஹாக்கி- இந்திய அணியில் 2 தமிழக வீரர்கள் !!
X

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வருகிற 23ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் நடைபெறவுள்ளது. இதில், இந்தியா, ஜப்பான், பாகிஸ்தான் மற்றும் போட்டியை நடத்தும் இந்தோனேஷியா ஆகிய அணிகள் ஏ பிரிவிலும், மலேசியா, கொரியா, ஓமன் மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் பி பிரிவிலும் உள்ளன. இதில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும். இதனால் இத்தொடர் ஆசிய நாடுகளைச் சேர்ந்த அணிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபிந்தர்பால் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பிந்தர் தலைமையிலான அணியில் மொத்தம் 20 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்திய ஹாக்கி அணியில் தமிழக வீரர்களான எஸ்.மாரீஸ்வரன், எஸ்.கார்த்தி ஆகிய 2 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

hockey players

இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக இந்திய ஜூனியர் மற்றும் சீனியர் முகாமில் உள்ளனர். அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிறப்பு விளையாட்டு மைய விடுதி மாணவர்கள் ஆவார்கள். தமிழக வீரர்கள் இருவர் மீதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அணியில் இடம்பிடித்த இரு வீரர்களுக்கும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ரூபிந்தர் தலைமையிலான அணியில் மொத்தம் 20 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

கோல்கீப்பர்கள்: பங்கஜ் குமார், சுராஜ் கார்கெரா.
தற்காப்பு: ரூபிந்தர் பால் சிங் (கேப்டன்), யாஷ்தீப் சிவாச், அபிஷேக் லாக்ரா, பிரேந்தர் லாக்ரா (துணை கேப்டன்), மன்ஜீத், திப்சன் திர்கி.

நடுகளம்: விஷ்ணுகாந்த், ராஜ் குமார், மாரீஸ்வரன் சக்திவேல், ஷெஷே கவுடா, சிம்ரன்ஜீத் சிங்.

முன்களம்: பவன் ராஜ்பார், அபாரன் சுதேவ், எஸ்வி சுனில், உத்தம் சிங், எஸ்.கார்த்தி.

மாற்று வீரர்கள்: மனிந்தர் சிங், நிலாம் சஞ்சீவ் எக்சஸ்.

newstm.in

Tags:
Next Story
Share it