Theme Check

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கூடுதலாக 2 வாரம் விடுமுறை!?

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கூடுதலாக 2 வாரம் விடுமுறை!?

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கூடுதலாக 2 வாரம் விடுமுறை!?
X

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கூடுதலாக 2 வாரங்கள் கோடை விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 14ஆம் தேதி ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுமுறை முடிந்து ஜூன் 13ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஜூன் 20ஆம் தேதி அல்லது அதற்கு அடுத்த வாரமான ஜூன் 27ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

school

ஏனென்றால் 10,300க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் பள்ளி திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதனால் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 2 வாரம் விடுமுறை நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it