தந்தையை கொன்ற 2 வயது குழந்தை.. அஜாக்கிரதை தாய் அயலா கைது..!
தந்தையை கொன்ற 2 வயது குழந்தை.. அஜாக்கிரதை தாய் அயலா கைது..!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லாண்டோ நகரைச் சேர்ந்தவர் ரெக்கி மப்ரி (26). இவர் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது அவருடைய இரண்டு வயது குழந்தை துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தார்.
இந்த வழக்கில், துப்பாக்கியை பாதுகாப்பாக வைக்காமல் குழந்தையின் கைக்கு கிடைக்கும் வகையில் அலட்சியமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் ரெக்கி மப்ரியின் மனைவி அயலா கைது செய்யப்பட்டார்.
அவர் மீது, கொலைக்கு காரணமாக இருந்தது, வீட்டில் போதை பொருள் பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘மூன்று குழந்தைகளின் தாயான அயலாவின் அஜாக்கிரதை தான் ஒரு உயிர் பறிபோக காரணம். எனவே, அவர் குற்றவாளி. இனி, மூன்று குழந்தைகளும் தாய், தந்தையின்றி வளர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதிலும் ஒரு குழந்தை, தந்தையை கொன்று விட்டோம் என்ற குற்ற உணர்வில் வளர்வது வேதனை அளிப்பதாக உள்ளது என்று நீதிபதி தெரிவித்தார்.
Next Story

