பெற்றோரை இழந்த 2 வயது குழந்தை..!! உதவிக்கரம் நீட்டும் அமெரிக்காவில் வாழும் தமிழ் மக்கள்..!!
பெற்றோரை இழந்த 2 வயது குழந்தை..!! உதவிக்கரம் நீட்டும் அமெரிக்காவில் வாழும் தமிழ் மக்கள்..!!

இந்தியாவைச் சேர்ந்த பிரவீண் - தமிழ்ச் செல்வி தம்பதியினர் அமெரிக்காவின் மிசிசிபி மாநிலத்தில் உள்ள ஆலிவ் ப்ராஞ்ச் நகரில் பணிபுரிந்து வந்தனர். இவர்களுக்கு 2 வயதில் விஷ்ருத் மிலன் என்ற மகன் உண்டு.
இவர்கள் இருவரும் எதிர்பாராத விதமாக மரணமடைந்துள்ளனர். என்ன காரணம் என்று வெளியில் தெரியப்படுத்தப்படவில்லை. பெற்றோர் இருவரையும் இழந்து விட்ட 2 வயது பச்சிளம் குழந்தையான விஷ்ருத் மிலனின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ள நிலையில், அமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்பு ஒன்று அவரை தத்து எடுத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரவீண் - தமிழ்ச் செல்வியின் பெற்றோர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். அவர்களால் அமெரிக்காவுக்கு வர முடியவில்லை என்றும் கூறப்படுகிறது, இந்நிலையில் பிரபாகரன் ராஜேந்திரன் என்பவர் பீரவீண் - தமிழ்ச் செல்வியின் பெற்றோர்களின் வாழ்வாதரத்திற்காகவும் 2 வயது மகனின் எதிர்காலத்திற்காகவும் நிதிதிரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 3 லட்சம் டாலர்கள் இலக்குடன் தொடங்கப் பட்ட இந்த GOFUND நிதியுதவி கோரிக்கைக்கு இது வரையிலும் 2 லட்சத்து 23 ஆயிரம் டாலர்கள் வரை நன்கொடை வழங்கியுள்ளனர்.
நிதியுதவி வழங்க விரும்புகிறவர்கள் https://gofund.me/72c16501 என்ற இணைப்பில் கூடுதல் தகவல்களைக் காணலாம்.