Theme Check

ஒரே இளைஞரை காதலித்த 2 இளம்பெண்கள்... இறுதியில் உயிரைவிட்ட இளைஞர் !!

ஒரே இளைஞரை காதலித்த 2 இளம்பெண்கள்... இறுதியில் உயிரைவிட்ட இளைஞர் !!

ஒரே இளைஞரை காதலித்த 2 இளம்பெண்கள்... இறுதியில் உயிரைவிட்ட இளைஞர் !!
X

ஒரே இளைஞரை 2 இளம்பெண்கள் காதலித்த நிலையில் காதலன் எதிர்பாராவிதமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ராணிபுரா பகுதியை சேர்ந்தவர் லியோட் டிசோசா (29). இவர் அதே பகுதியைச் சேர்ந்த அஸ்விதா (22) என்ற இளம்பெண்ணை கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனால் இவர்கள் காதல் விவகாரம் வீடு வரை தெரிந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு லியோட்டி டிசோசாவுக்கு, டாக்லின் என்ற இளம்பெண் அறிமுகமாகியுள்ளார். டிசோசா- அஸ்விதா காதலில் டாக்லின் குறுக்கே நுழைந்துள்ளார் என்றே கூறலாம். அதாவது டிசோசாவை பிடித்துப்போக டாக்லினும் அவரை காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை மங்களூரு சோமேஸ்வரா கடற்கரைப் பகுதியில் லியோ டிசோசா, அவரது காதலி அஸ்விதா மற்றும் டாக்லின் ஆகிய மூவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

lovers

அப்போது தனது எட்டு ஆண்டு காதலை பிரிக்கக்கூடாது என்று வாக்குவாதம் செய்து அஸ்விதா கடலில் குதித்துள்ளார். அவரைக் காப்பாற்ற காதலன் லியோ டிசோசா குதித்தார். அஸ்விதாவை உயிருடன் மீட்ட பின் கடல் அலையில் சிக்கிய லியோ டிசோசா மயக்கத்தில் இருந்துள்ளார். அவர்கள் இருவரையும் அங்குள்ள நபர்களின் உதவியோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார் டாக்லின்.

lovers

ஆனால் வழியிலேயே லீயோ டிசோசா உயிரிழந்தார். அஸ்விதா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் விவகாரத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் இளைஞர் எதிர்பாராதவிதமாக கடலில் சிக்கினாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it