Theme Check

அடுத்தடுத்து மயங்கி விழுந்து 20 நாய்கள் உயிரிழப்பு.. அச்சத்தில் மக்கள் !!

அடுத்தடுத்து மயங்கி விழுந்து 20 நாய்கள் உயிரிழப்பு.. அச்சத்தில் மக்கள் !!

அடுத்தடுத்து மயங்கி விழுந்து 20 நாய்கள் உயிரிழப்பு.. அச்சத்தில் மக்கள் !!
X

ஸ்ரீநகல் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் விஷம் கலந்த உணவைக் கொடுத்ததில் 20 நாய்கள் பலியாகின சோகமான நிகழ்வு நடந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஸ்ரீநகல் பகுதியில் ஏராளமான நாய்கள் உலாவந்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள், குழந்தைகள் வெளியே செல்ல கடும் அச்சத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில் திடீரென அடுத்தடுத்து 20 நாய்கள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

dog

இது தொடர்பாக காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த சனி மற்றும் ஞாயிறுகளில், அந்த கிராமத்துக்கு வந்த சிலர், ரொட்டிகளில் விஷம் கலந்து அங்கிருந்த நாய்களுக்குக் கொடுத்துள்ளனர். இதில் 20 நாய்கள் உயிரிழந்தன என சிலர் கூறுகின்றனர். மேலும் பல நாய்கள் விஷம் கலந்த உணவை உண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

dog

நாய்களை விஷம் வைத்துக் கொன்றவர்கள் யார், அவர்கள் எதற்காக அவ்வாறு செய்தார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it