Theme Check

இனி சிலிண்டருக்கு 200 ரூபாய்.. மத்திய அரசு அடுத்த அறிவிப்பு !!

இனி சிலிண்டருக்கு 200 ரூபாய்.. மத்திய அரசு அடுத்த அறிவிப்பு !!

இனி சிலிண்டருக்கு 200 ரூபாய்.. மத்திய அரசு அடுத்த அறிவிப்பு !!
X

வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மாற்றப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 917 ரூபாய்க்கு விற்கப்பட்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை, மார்ச் மாதத்தில் 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 967 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. எனினும் 965 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில் இந்த மாதத்தில் மட்டும் இரண்டாவது முறையாக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. முதல் முறை, ரூ.50 அதிகரித்து 1,015ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மீண்டும் யாரும் எதிர்பார்க்காத நிலையில் சிலிண்டர் விலை ரூ.3 அதிகரித்து ரூ.1018.50க்கு விற்பனையாகிறது.

fdg

இந்த சூழலில் பிரதான் மந்திரி உவாலா யோஜனா திட்டத்தின் (வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப பெண்களுக்கு) கீழ் 12 சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தலா 200 ரூபாய் வீதம் ஒரு ஆண்டுக்கு மானியம் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மேலும் இறக்குமதி சார்ந்த பிளாஸ்டிக் மூலப்பொருட்களுக்கான சுங்கவரி குறைக்கப்படும். சில உருக்கு மூலப்பொருட்களின் இறக்குமதி வரி குறைக்கப்படும், சில எஃகு பொருட்களுக்கு ஏற்றுமதி வரி விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it