கழிவு நீர் கால்வாயில் வந்த 2000 ரூபாய் நோட்டுகள்!!
கழிவு நீர் கால்வாயில் வந்த 2000 ரூபாய் நோட்டுகள்!!

கழிவு நீர் கால்வாயில் 2000, 200, 100, 50 ரூபாய் நோட்டுகள் வரிசையாக மிதந்து வந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சிவன் கோவில் தேரடி வீதி பகுதியில் கழிவு நீர் ஓடை அமைந்துள்ளது. இந்த ஓடையில் திடீரென 2000, 200, 100,50 ரூபாய் நோட்டுகள் வரிசையாக மிதந்து வந்தன.
இதைக் கண்ட ஒருவர் மற்றொருவருக்கு கூற சில நிமிடங்களில் அந்த பகுதி முழுக்க தெரியவந்தது. உடனே அந்த கழிவு நீர் ஓடை அருகில் வந்த மக்கள் இந்த நிகழ்வை ஆச்சரியமாக பார்த்துச் சென்றனர்.

அதில் பலர் இந்த பணத்தை எப்படி எடுப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கழிவுநீரில் கையை விட்டு அந்த ரூபாய் நோட்டுகளை எடுத்தார்.
ஆனால் அவரின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அது நிஜமான நோட்டுகள் இல்லை என்றும், குழந்தைகள் விளையாடும் விளையாட்டு நோட்டுகள் என்பதும் தெரியவந்தது. இதை அறிந்த பொதுமக்கள் ஏமாற்றத்தோடு திரும்பி சென்றனர்.
newstm.in

