Theme Check

பூமியை நெருங்கி வரும் ‘2008 G20’ குறுங்கோள்...!!

பூமியை நெருங்கி வரும் ‘2008 G20’ குறுங்கோள்...!!

பூமியை நெருங்கி வரும் ‘2008 G20’ குறுங்கோள்...!!
X

விண்வெளியில் லட்சக் கணக்கான விண்கற்கள் சுற்றி வருகின்றன. இதுவரை 11 லட்சம் விண்கற்கள் சுற்றி வருவதை கண்டுபிடித்துள்ளனர். இந்த கற்கள் பெரிய பாறாங்கல் அளவில் இருந்து சிறிய மலை குன்று அளவு வரை இருக்கின்றன. இந்த கற்கள் அடிக்கடி பூமி அருகே கடந்து செல்வது வழக்கம்.

அவற்றில் சில கற்கள் பூமி மீதும் விழுந்துள்ளன. ஆனால் பெரும்பாலான கற்கள் வளிமண்டலத்தில் வெடித்து பூமிக்கு வரும் போது காற்று உராய்வு ஏற்பட்டு தீ பிடித்து விடும். எனவே பூமிக்குள் வருவதற்குள் அது எரிந்து சாம்பலாகி விடுவது உண்டு. அதையும் மீறி முழுமையாக எரியாமல் பூமியில் விழும் கற்களும் உண்டு.

இரவு நேரத்தில் வானத்தில் திடீரென எதோ ஒரு பொருள் தீபிடித்து எரிந்து கொண்டு பாய்ந்து செல்வதை பார்க்கலாம். விண்கற்கள் எரிவதுதான் இப்படி நமக்கு தென்படும்.

பூமிக்கு அருகே நகர்ந்து செல்லக்கூடிய, 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுங்கோள்களை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். அதில் ஆயிரத்து 45 சிறுகோள்கள் ஆபத்தானவையாக பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் ‘2008 G20’ என்ற சிறுகோள் நாளை இரவு 11.21 மணியளவில் பூமி அருகே கடந்து செல்ல உள்ளது. ஆனால் அது பூமி மீது மோதிவிடுமோ என நாம் கவலைப்பட அவசியமில்லை என விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.

97 மீட்டர் அகலம், 230 மீட்டர் நீளம் கொண்ட அந்த குறுங்கோள், மணிக்கு 29 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில், பூமியில் இருந்து 45 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் கடந்து செல்ல உள்ளது.

இதே சிறுகோள், 1935-ம் ஆண்டு 19 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிலும், 1977-ம் ஆண்டு 29 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிலும் கடந்து சென்றதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:
Next Story
Share it