2020 நிமிடங்களில் 2020 கவிதைகள்: தமிழக இளைஞரின் அசத்தல் சாதனை
திருப்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இரண்டாயிரத்து 20 நிமிடங்களில் 2020 கவிதைகள் எழுதி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.இவரது சாதனையை கின்னஸ் அமைப்பு அங்கீகரித்துள்ளது.

திருப்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இரண்டாயிரத்து 20 நிமிடங்களில் 2020 கவிதைகள் எழுதி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜடைகிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவருக்கு சிறுவயதில் இருந்தே கவிதை, கதை புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம்.பள்ளி நாட்களில் இருந்தே கவிதை புத்தகங்களை படித்து வந்த கதிர்வேல், எந்த தலைப்பை சொன்னாலும் உடனடியாக கவிதை எழுதும் திறன் கொண்டவர். அனைவரும் இவரது கவிதை தொகுப்பை வெகுவாக பாராட்டினார்கள்.
இதையடுத்து, தமிழில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அதிகரித்தது. நடப்பாண்டு (2020) வைத்து சாதனை படைத்துள்ளார் கதிர்வேல். அதாவது 2020 நிமிடங்களில் 2020 கவிதைகளை எழுதியுள்ளார். அவருடைய படைப்பை ஏற்ற கின்னஸ் அமைப்பு கதிர் வேல் பெயரை கின்னஸ் புத்தகத்தில் சேர்த்து அவரது திறமையை அங்கீகரித்துள்ளது.
இந்த தமிழக இளைஞரை நாமும் வாழ்த்துவோம்..!
newstm.in

