Theme Check

2021 மருத்துவத்திற்கான நோபல் பரிசு: தொடாமல் உணரும் சென்சார் கருவி கண்டுபிடித்த இருவர் தேர்வு !!

2021 மருத்துவத்திற்கான நோபல் பரிசு: தொடாமல் உணரும் சென்சார் கருவி கண்டுபிடித்த இருவர் தேர்வு !!

2021 மருத்துவத்திற்கான நோபல் பரிசு: தொடாமல் உணரும் சென்சார் கருவி கண்டுபிடித்த இருவர் தேர்வு !!
X

2021 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

உலகளவில் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு நோபல் பரிசுவழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்றைய தினத்தில் இருந்து வருகிற 11ஆம் தேதி வரை அறிவிக்கப்படுகிறது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.

nobel

அந்த வகையில், நடப்பு ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து இன்று அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டம் பட்டாஹவுடியன் ஆகியோர் மருத்துவத்திற்கான நோபல் பரிசை பெறுகிறார்கள். வெப்பம், உடல் வலியை தொடாமல் உணரும் சென்சார் கருவியை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு இவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

அதாவது, வெப்பநிலை மற்றும் தொடுதலுக்கான ஏற்பிகளைக் கண்டறிந்ததற்காக 2021 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு டேவிட் ஜூலியஸ்(David Julius), ஆர்டெம் பட்டபௌஷியன்(Ardem Patapoutian) ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, வெப்பம், குளிர் மற்றும் தொடுதல் ஆகியவை நரம்பு மண்டலத்தில் ஏற்படுத்தும் தாக்கம், அது அனுப்பும் சமிக்ஞைகள் குறித்த விஞ்ஞானிகளின் இந்த ஆய்வு, பல்வேறு உடலியல் செயல்முறைகளில் அவற்றின் செயல்பாடுகளை தெளிவுபடுத்துவதுடன் நாள்பட்ட வலி உள்பட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைக்குப் பயன்படுகிறது.

newstm.in


Tags:
Next Story
Share it