Theme Check

2022 டி20 உலகக் கோப்பை: மீண்டும் மோதும் இந்தியா- பாகிஸ்தான்.. முழு அட்டவணை வெளியீடு !!

2022 டி20 உலகக் கோப்பை: மீண்டும் மோதும் இந்தியா- பாகிஸ்தான்.. முழு அட்டவணை வெளியீடு !!

2022 டி20 உலகக் கோப்பை: மீண்டும் மோதும் இந்தியா- பாகிஸ்தான்.. முழு அட்டவணை வெளியீடு !!
X

2022 ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இத்தொடர் நடைபெறுகிறது. மொத்தம் 45 போட்டிகள் கொண்ட இந்த தொடர், வரும் அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதிவரை இந்த போட்டிகள் நடைபெறுகின்றது.

அடிலெய்டு, பிரிஸ்பேன், கீலாங், ஹோபார்ட், மெல்போர்ன், பெர்த் மற்றும் சிட்னி உள்ளிட்ட இடங்களில் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரையிறுதிப் போட்டிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்திலும், அடிலெய்டு ஓவல் மைதானத்திலும் முறையே நவம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெறும். இறுதிப் போட்டி நவம்பர் 13ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

ind pak

போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளன. இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடுகிறது. அதை தொடர்ந்து அக்டோபர் 27 - குரூப் ஏ ரன்னர், அக்டோபர் 30 - தென்னாப்பிரிக்கா, நவம்பர் 2 - வங்கதேசம் மற்றும் நவம்பர் 6 - குரூப் பி வின்னரை சூப்பர் 12 சுற்றில் இந்தியா எதிர்கொள்கிறது.

சூப்பர் 12 சுற்றின் குரூப் 1-இல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் 2-இல் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் இடம் பெற்றுள்ளன.

ind pak

அதேசமயம் நமீபியா, ஸ்காட்லாந்து, இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவை முதன்மைச் சுற்றுக்கு முந்தைய தகுதிச் சுற்றுகளில் விளையாடுகின்றன. அக்டோபர் 23 ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை அடுத்த மாதம் 7ஆம் தேதி தொடங்குகிறது.

கடந்த உலகக்கோப்பை தொடரின்போது இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் ஐசிசி உலகக்கோப்பை தொடரில் முதல்முறையாக இந்தியாவை பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. இதற்கு இந்தியா பதிலடி கொடுக்குமா என ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


newstm.in

Tags:
Next Story
Share it