உக்ரைனில் இருந்து ஒரே நாளில் 2,135 இந்தியர்கள் மீட்பு !!
உக்ரைனில் இருந்து ஒரே நாளில் 2,135 இந்தியர்கள் மீட்பு !!

உக்ரைனின் அண்டை நாடுகளிலிருந்து 11 சிறப்பு பயணிகள் விமானம் மூலம் 2,135 பேர் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியதையடுத்து அங்கு படித்துவந்த வெளிநாட்டு மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பல்வேறு நாடு, தங்கள் மாணவர்களை போர்க்கு முன்பாகவே அழைத்துக்கொண்டது. எனினும் அங்கு இந்திய மாணவர்கள் தவித்து வந்தனர்.

இதனையடுத்து, அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது. உக்ரைன் நாட்டுக்குள் விமானங்கள் செல்லமுடியாது என்பதால், அண்டை நாடுகள் வழியாக சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.
அந்த வகையில், இதுவரை சுமார் 13 ஆயிரம் பேர் நாடு திரும்பியுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று அறிவித்திருந்தது.
இந்த நிலையில், உக்ரைனின் அண்டை மாநிலங்களிலிருந்து 11 சிறப்பு பயணிகள் விமானம் மூலம் 2,135 பேர் இன்று மட்டும் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி முதல் சிறப்பு விமானங்கள் மூலம் இதுவரை 15,900 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, உக்ரைனிலுள்ள இந்தியர்கள் தகவல் படிவத்தை உடனடியாக நிரப்புமாறு உக்ரைனுக்கான இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in

