நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின்!!
நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின்!!

நடுக்கடலில் இரண்டு படகுகளை மடக்கிப்பிடித்து 218 கிலோ ஹெராயின் போதைப்பொருளை கடலோர பாதுகாப்புப்படை மற்றும் வருவாய் புலனாய்வுத்துறை கைப்பற்றியுள்ளனர்.
கடலோர பாதுகாப்புப்படை மற்றும் வருவாய் புலனாய்வுத்துறை கூட்டு நடவடிக்கையில், தமிழக கடல் பகுதியிலிருந்து வந்ததாக சந்தேகிக்கப்படும் "பிரின்ஸ்" மற்றும் "லிட்டில் ஜீசஸ்" ஆகிய படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மற்றும் கடத்தி வரப்பட்ட ஹெராயின் கொச்சி கொண்டு செல்லப்பட்டுள்ளது. 218 கிலோ ஹெராயின் சர்வதேச சந்தையில் 1526 கோடி ரூபாய் மதிப்புள்ளது எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து படகுகள் நடுக்கடலுக்கு வந்து ஹெராயின் போதைப்பொருளை கடத்திச் செல்லும் என வருவாய் புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்ததாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கடலோர பாதுகாப்புப்படை மற்றும் வருவாய் புலனாய்வுத்துறை தொடர் ரோந்தில் ஈடுபட்டு சந்தேகத்துக்குரிய வகையில் பயணித்துக்கொண்டிருந்த படகுகளை பிடித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொச்சியில் உள்ள கடலோர பாதுகாப்புப்படை தலைமையகத்தில் பிடிபட்ட படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும் விசாரணை தொடர்கிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
newstm.in

