Theme Check

வேலை தேடும் இளைஞர்கள் உஷார்.. 23 வயது இளம்பெண் கைது !!

வேலை தேடும் இளைஞர்கள் உஷார்.. 23 வயது இளம்பெண் கைது !!

வேலை தேடும் இளைஞர்கள் உஷார்.. 23 வயது இளம்பெண் கைது !!
X

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களை நம்பவைத்து, 23 வயதே ஆன இளம்பெண் ஒருவர் 1 கோடி ரூபாய் மோசடி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் ஏஞ்சல் (23). இவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து வாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இதன் வாயிலாக, படித்த இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். ஆனால் இவை அனைத்தும் மோசடி என்பது அதன்பின்னர் தான் தெரியவந்துள்ளது.

fdg

போலியாக வேலை வாய்ப்பு நிறுவனம் நடித்தி இளம்பெண் ஏமாற்றியது அம்பலமானது. அதோடு மட்டுமல்லாமல் அவர்களிடம், நேரடியாகவும், வங்கி வாயிலாகவும், 1 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளார்.

இதுகுறித்து, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று ஏஞ்சலை பிடித்து விசாரித்தனர். அவர், குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

saf

இதையடுத்து இளம்பெண் ஏஞ்சல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இவரது பின்னணியில் மிகப்பெரிய மோசடி கும்பல் இருப்பது தெரிந்துள்ளது. அந்த கும்பலைச் சேர்ந்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதனால் வேலை தேடும் இளைஞர்கள் உஷாக இருக்கவேண்டும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Next Story
Share it