6 மணி நேரத்தில் 24 முட்டையிட்ட கோழி.. மக்கள் வியப்பு !!
6 மணி நேரத்தில் 24 முட்டையிட்ட கோழி.. மக்கள் வியப்பு !!

சின்னு எனும் கோழி, ஆறு மணி நேரத்தில் 24 முட்டைகளை இட்டு சாதனை படைத்துள்ளது.
கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள புன்னப்புரா பகுதியைச் சேர்ந்த சி.என்.பிஜு குமார் என்பவர் கோழிப் பண்ணை வைக்க உள்ளார். இதற்காக 23 BV380 ஹைபிரிட் ரக கோழிகளை வாங்கி வந்துள்ளார். அக்கோழிகளை தற்போது வீட்டின் அருகே அடைத்துவைத்து பராமரிக்கிறார்.
இந்த நிலையில் அந்த கோழிகளில் ஒரு கோழி கடந்த மிகவும் அசதியாக இருந்துள்ளது. அதனை கவனித்த பிஜு கூட்டிலிருந்து அதை எடுத்து, தனியாக விட்டுள்ளார். பின்னர் அந்தக் கோழி கால் தாங்கியபடி நடந்ததை கவனித்துள்ளார். அதையடுத்து காலில் வலி நிவாரணி தடவி விட்டுள்ளார்.
பின்னர் அன்றைய தினமே காலை 8.30 தொடங்கி மதியம் 2.30 மணி வரையில் தொடர்ச்சியாக முட்டைகளை இட்டு வந்துள்ளது. வழக்கமாக முட்டை இட்ட சற்று நேரத்தில் கோழி அந்த இடத்தை விட்டு சென்று விடும். ஆனால், அந்தக் கோழி மீண்டும் ஒரு முட்டை இட்டது பிஜுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்தச் செய்தியை அறிந்து பிஜு வீட்டிற்கு பலரும் வருகை தந்து, கோழியை பார்த்துள்ளனர். ஊரார் கூடியிருக்க அவர்கள் முன்னிலையிலும் அக்கோழி முட்டை இட்டுள்ளது.

இந்தச் செய்தி குறித்து அறிந்த கால்நடை மருத்துவர்களும் கோழியை வந்து பார்வையிட்டுள்ளனர். அவர்கள் கூறுகையில், இது மிகவும் அரிதான ஒன்று. அந்த கோழி தொடர்ச்சியாக முட்டையிட்டது ஏன் என்பதை விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்தால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும், என தெரிவித்தனர். பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட ஹார்மோன் கோளாறு காரணமாக இது நடந்திருக்கலாம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஒரே சமயத்தில் அதிகளவிலான முட்டையை இட்ட கோழிக்கு அதன் உடலில் இருந்து கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின் போன்ற சக்திகள் பெருமளவு குறைந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
newstm.in

