Theme Check

பரபரப்பு.. மதிய உணவு சாப்பிட்ட 25 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி..!

பரபரப்பு.. மதிய உணவு சாப்பிட்ட 25 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி..!

பரபரப்பு.. மதிய உணவு சாப்பிட்ட 25 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி..!
X

சிதம்பரம் அருகே, அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 25 மாணவ - மாணவியருக்கு வாந்தி, மயக்கம், தலைவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிதம்பரம் அருகே உள்ள அத்தியா நல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 60-க்கும் அதிகமான குழந்தைகள் வருகின்றனர்.

இந்நிலையில், இந்தப் பள்ளியில் இன்று மதிய உணவு சாப்பிட்ட 25 குழந்தைகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம், தலைவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, குழந்தைகள் அனைவரும் அண்ணாமலை நகரில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குழந்தைகளுக்கு ஏற்பட்ட உடல் உபாதைகளுக்கு அழுகிய முட்டை காரணமா அல்லது உணவால் ஏற்பட்ட பாதிப்பா என கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
Share it