25 ஆண்டு கால இசைப்பயணம்.. யுவனை நெகிழவைத்த நடிகர் கார்த்தி !!
25 ஆண்டு கால இசைப்பயணம்.. யுவனை நெகிழவைத்த நடிகர் கார்த்தி !!

நடிகர் கார்த்தி ஹீரோவான ‘பருத்திவீரன்’ படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாதான். கார்த்தியின் நடிப்புப் போற்றப்பட்ட அளவுக்கு பின்னணி இசையும் பாடலும் புகழ் பெற்றது. பட்டிதொட்டியெங்கும் இப்படத்தின் பாடல் ஒலித்தது.
இதோடுமட்டுமல்லாமல் நான் மகான் அல்ல, பையா, பிரியாணி உள்ளிட்ட கார்த்தி நடித்த படங்களில் இசையமைத்திருக்கும் யுவன் மீண்டும் கார்த்தியுடன் விருமன் படத்தின் மூலம் இணைந்துள்ளார்.

கார்த்தி மற்றும் யுவன் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பதும், அந்தப் பருவத்திலிருந்தே இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த யுவனுக்கு விலையுயர்ந்த பிரீமியம் வாட்ச் பரிசளித்து நட்பைப் போற்றியுள்ளார் கார்த்தி.
ஏற்கனவே, விருமானுக்காக யுவன் இசையமைத்து சித் ஸ்ரீராம் பாடிய ’கஞ்சா பூவு கண்ணால’ பாடலின் ப்ரோமோ வீடியோ சுமார் 3.7 மில்லியன் பார்வைகளைப் பெற்று இன்னும் யூடியூப்பில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த நிலையில் தற்போது பிரீமியம் வாட்ச் பரிசளித்து சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் அடித்துள்ளது.
newstm.in

