உஷார்!! தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250% அதிகரிப்பு!!

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250% அதிகரிப்பு! அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம்

உஷார்!! தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250% அதிகரிப்பு!!
X

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250% அதிகரித்திருப்பது தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் 2018ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 4,155 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 18% அதிகமாகும். கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250% அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவலை அளித்துள்ள புள்ளிவிவரம், அதில் 49% பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமை தொடர்பானவை என குறிப்பிட்டுள்ளது.

உஷார்!! தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250% அதிகரிப்பு!!

இந்திய அளவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகவுள்ள 5 மாநிலங்களில் தமிழகமும் இடம்பிடித்துள்ளது. புதுப்புது வழிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அரங்கேறி வருவதாகவும், இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்களை தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

உஷார்!! தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250% அதிகரிப்பு!!மேலும் குழந்தைகள் பாலியல் சீண்டல் தொடர்பாக கிராமம், நகரம் என எல்லா இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்றும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உங்கள் குழந்தைகள், எத்தனை வயதானாலும் உங்களுக்கு குழந்தைகளாகவே தெரிவார்கள். அதனால், உறவினர்களோ, நண்பர்களோ, நன்கு பழகியவர்களோ எங்கு வெளியிடங்களுக்குச் சென்றாலும், எப்போதும் உங்கள் குழந்தைகளின் மீது ஒரு பார்வை இருக்கட்டும். குட் டச், பேட் டச் போன்றவைகளை உங்கள் குழந்தைகளிடம் கூச்சப்படாமல் சொல்லி, அவர்களுக்குப் புரிய வையுங்கள். பெரு நகரங்களில் பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லும், வேன், ஆட்டோ டிரைவர்களிடம் எச்சரிக்கையாகவே பழகச் சொல்லி உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். முன் பின் அறிமுகமில்லாதவர்களிடம் பாதுகாப்பு உணர்வுடனேயே கொஞ்சம் தள்ளி இருக்கச் சொல்லுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் குழந்தைக்கும், உங்களுக்கும் மட்டுமே தெரியும்படியான பாஸ்வேர்டு ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவசர காலத்தில் வெளிநபர்கள் ‘உங்க அம்மா அழைச்சாங்க’ என்று குழந்தைகளிடம் நெருங்கும் போது இந்த பாஸ்வேர்டு யுக்தி கைகொடுக்கும்.

newstm.in

Tags:
Next Story
Share it