Theme Check

276 இளைஞர்களுடன் 6 இளம்பெண்கள்!! போதை தலைக்கேறி கொண்டாட்டம்!!.

ஒரே இடத்தில் திரண்ட 250 இளைஞர்கள்.. போதை தலைக்கேறி கொண்டாட்டம்.. அல்லேக்காக தூக்கிய போலீஸ்..

276 இளைஞர்களுடன் 6 இளம்பெண்கள்!! போதை தலைக்கேறி கொண்டாட்டம்!!.
X

கொடைக்கானலில் இரவு போதை விருந்தில் ஈடுபட்ட 250 இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளம் மூலம் நண்பர்களாக இணைந்த இளைஞர்கள் சில நாட்களாக சந்திக்க திட்டமிட்டுள்ளனர். அதை செயல்படுத்தும் வகையில் கொடைக்கானல் குண்டுபட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் தங்களின் சந்திப்பை உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் அந்த பார்டியில் மது, கஞ்சா போன்ற போதை வஸ்துகள் பயன்படுத்தப்படுவதாக பொது மக்களில் சிலர் தென் மண்டல ஐஜிக்கு புகார் கொடுத்துள்ளனர்.

276 இளைஞர்களுடன் 6 இளம்பெண்கள்!! போதை தலைக்கேறி கொண்டாட்டம்!!.

அதன் அடிப்படையில் பார்ட்டி நடைபெற்று கொண்டிருக்கும் சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் அந்த இடத்தைச் சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் போதையில் தள்ளாடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். போலீசார் வருகையை அறிந்த இளைஞர்கள் சிலர் தப்பியோட முயற்சித்தனர்.

276 இளைஞர்களுடன் 6 இளம்பெண்கள்!! போதை தலைக்கேறி கொண்டாட்டம்!!.

எனினும் எவரையும் விடாமல் பார்ட்டியில் கலந்துகொண்ட எல்லோரையும் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த மது பாட்டில்கள், போதை வஸ்துகள் ஆகியவற்றை கைப்பற்றினர். பின்னர் இளைஞர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். பார்ட்டி செய்து மாட்டிய நபர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

276 இளைஞர்களுடன் 6 இளம்பெண்கள்!! போதை தலைக்கேறி கொண்டாட்டம்!!.

மேலும் போலீசார், சமூகவலைத்தளத்தில் யார் இந்த பார்ட்டியை முதலில் திட்டமிட்டது முதற்கொண்டு அவர்கள் எங்கிருந்து வந்திருந்தனர், அவர்களில் இருக்கும் யாருக்காவது போதைப்பொருட்கள் விற்பவர்களுடன் தொடர்பு உள்ளதா என பல்வேறு கோணங்களில் தங்களின் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it