Theme Check

தமிழகத்தில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளது.. மத்திய அரசு !!

தமிழகத்தில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளது.. மத்திய அரசு !!

தமிழகத்தில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளது.. மத்திய அரசு !!
X

இந்தியாவில் கல்வியில் பின்தங்கிய அதிக மாவட்டங்கள் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 4ஆம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளதாக யுஜிசி (UGC) ஆய்வில் தெரிய வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய கல்வி அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில், பல்கலைக்கழக மானியக் குழுவால் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 374 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதன்படி கல்வியில் பின் தங்கிய மாவட்டங்கள் அதிகம் கொண்ட மாநிலமாக உத்திரபிரதேசம் உள்ளது. அடுத்ததாக, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழகம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

அதன்படி தமிழகத்தில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, திருநெல்வேலி, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, தேனி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களாக யுஜிசி தனது ஆய்வில் கண்டறிந்துள்ளது.

education
இந்திய அளவில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை சராசரியில் தமிழகம் 50 சதவிகிதத்துடன் முதலிடம் வகிக்த்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்கள் கல்வியில் பின் தங்கிய மாவட்டங்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it