27 இல்ல 270 அமாவாசை வந்தாலும் எடப்பாடி பழனிசாமியால் இனி முடியாது.. கார்த்தி சிதம்பரம் பதிலடி !!
27 இல்ல 270 அமாவாசை வந்தாலும் எடப்பாடி பழனிசாமியால் இனி முடியாது.. கார்த்தி சிதம்பரம் பதிலடி !!

270 அமாவாசை வந்தாலும் பழனிசாமி இனி முதல்வராக முடியாது என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி அனைத்து கட்சியினரும், சுயேச்சைகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பரப்புரையின்போது அடுத்த 27 அமாவாசையில் திமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். இதற்கு ஆளும் கட்சி தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. பிரச்சாரம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி சரித்திர விபத்தால் முதல்வரானவர். ஜோசியர் பழனிசாமியை சமாதானப்படுத்த 27 அமாவாசை கழித்து சூடம் ஏற்றுங்கள் வாய்ப்பு கிடைக்கும் என கூறியிருக்கலாம்.

தேர்தலில் தோற்றதை பழனிசாமியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இனி 270 அமாவாசை வந்தாலும் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வர முடியாது. இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களவை, சட்டப் பேரவையில் பெரும்பான்மை இருந்தால் மட்டுமே பதவியில் இருக்க முடியும்.
ஒரே நாடு, ஒரே தேர்தலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வைப்பார்களா? பாதியில் பெரும்பான்மை இழந்து விட்டால் யார் ஆட்சி செய்வது, அடிக்கடி தேர்தல் நடத்துவது நாட்டுக்கு நல்லது, என அவர் கூறினார்.
newstm.in

