Theme Check

இந்தியாவில் புதிதாக 2,86,384 பேருக்கு கொரோனா பாதிப்பு.. இன்றைய முழு நிலவரம் !!

இந்தியாவில் புதிதாக 2,86,384 பேருக்கு கொரோனா பாதிப்பு.. இன்றைய முழு நிலவரம் !!

இந்தியாவில் புதிதாக 2,86,384 பேருக்கு கொரோனா பாதிப்பு.. இன்றைய முழு நிலவரம் !!
X

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 573 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து மூன்று லட்சத்தை நெருங்கி பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும் பல்வேறு மாநிலங்கள் இரவுநேர ஊரடங்கு, வார இறுதிநாட்கள் முழுமுடக்கம் போன்ற நடவடிக்கைகளால் தொற்றின் தீவிரம் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

corona

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இன்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,86,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,03,71,500-ஆக அதிகரித்துள்ளது.இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,03,71,500-ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 573 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,91,700ஆக உயர்ந்துள்ளது.மேலும் தொற்றில் இருந்து 3,06,357 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 22,02,472 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

corona

நாடு முழுவதும் நேற்று வரை 1,63,84,39,207 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 19.59 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 5.46 சதவிகிதமாக உள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it