தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டி.. இந்திய அணி பேட்டிங் !
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டி.. இந்திய அணி பேட்டிங் !

இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டெல்லியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.
இதேபோன்று முதல் போட்டியிலும் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 211 ரன்கள் குவித்தது. எனினும் தென் ஆப்பிரிக்கா அணி வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் அந்த அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.
இரண்டாவது டி20 போட்டியில் விளையாடும் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் விவரம்
2ND T20I.India XI: R Gaikwad, Ishan Kishan, S Iyer, R Pant (c/wk), H Pandya, D Karthik, A Patel, H Patel, B Kumar, Y Chahal, A Khan.
2ND T20I.South Africa XI: R Hendricks, T Bavuma (c), R Van Der Dussen, D Miller, H Klaasen (wk), W Parnell, D Pretorius, K Maharaj, T Shamsi, K Rabada, A Nortje.
newstm.in