#BIG BREAKING:- 2 வது முறையாக நில அதிர்வு.. அச்சத்தில் கர்நாடக மக்கள்..!
#BIG BREAKING:- 2 வது முறையாக நில அதிர்வு.. அச்சத்தில் கர்நாடக மக்கள்..!

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கமானது காலை 7.45 மணிக்கு ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
அதே போல், அங்குள்ள தட்சிண கன்னடா மாவட்டத்திலும் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 2.3 ஆக பதிவாகி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக நில அதிர்வு உணரப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
Next Story

