2ஆவது பெண் ராணுவ அதிகாரி ! இந்தியாவின் பெருமைமிக்க மகளுக்கு குவியும் வாழ்த்து!
2ஆவது பெண் ராணுவ அதிகாரி ! இந்தியாவின் பெருமைமிக்க மகளுக்கு குவியும் வாழ்த்து!

நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள சிக்கிம் மாநிலத்தில் இருந்து கேப்டன் பதவியை இரண்டாவது பெண் ராணுவ அதிகாரி ஒருவர் நாட்டிற்கு சேவையாற்றி வருகிறார்.
தீப்ஷிகா சேத்ரி இந்திய தரைப்படையில் கேப்டன் அந்தஸ்து கொண்ட மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் தனது பள்ளிப்படிப்பை டிஷி நம்கயால், புனித ஜோசப் மற்றும் பிர்லா பலிகா வித்யாபித் ஆகிய பள்ளிகளில் முடித்தார். பின்னர் அவர் சிக்கிம் மனிப்பால் மருத்துவ அறிவியல் மையத்தில் மருத்துவம் பயின்றுவிட்டு ராணுவத்தில் அதிகாரியாக இணைந்தார்.

தீப்ஷிகா சேத்ரி நம் தேசத்தை பெருமைப்படுத்தியுள்ளார். மற்ற பெண்களுக்கு அவரது வேகமும் துணிச்சலும் உத்வேகமாக இருக்கும் என பலரும் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். தேசத்தை பாதுகாக்கும் இந்தியாவின் இந்த பெருமைமிக்க மகளுக்கு வாழ்த்துக்கள் என்றும் பலரும் உணர்ச்சி பொங்க பதிவிட்டு வருகின்றனர்.
newstm.in

