Theme Check

உடல் நலம் குணமடைய உயிர் பலி.. தாத்தா - பாட்டி உட்பட 3 பேர் கைது..!

உடல் நலம் குணமடைய உயிர் பலி.. தாத்தா - பாட்டி உட்பட 3 பேர் கைது..!

உடல் நலம் குணமடைய உயிர் பலி.. தாத்தா - பாட்டி உட்பட 3 பேர் கைது..!
X

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் நஸ்ருதீன்(32). இவரது மனைவி ஷாலிஹா(24). இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை ஒன்று இருந்தது. இந்நிலையில், அந்தக் குழந்தை வீட்டின் பின்புறம் இருந்த பிளாஸ்டிக் தொட்டியில் இறந்து கிடந்துள்ளார்.

பின்னர், இறந்த குழந்தையை மல்லிப்பட்டினம் ஜமாத்துக்கு உட்பட்ட முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்துள்ளனர். தகவலறிந்த அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்து, இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், நஸ்ருதீனின் சித்தி ஷர்மிளா பேகம்(48). இவரது கணவர் அசாருதீன்(50). வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பிய அசாருதீனுக்கு, அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து, கேரள மந்திரவாதி முகமது சலீம்(48) என்பவரிடம் ஷர்மிளா பேகம் குறி கேட்டுள்ளார். அவர், “உடல் நலம் குணமடைய வேண்டும் என்றால் உயிர் பலி கொடுக்கவேண்டும்” எனக் கூறியதால் 6 மாத பெண் குழந்தையை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து, ஷர்மிளா பேகம், அவரது கணவர் அஸாருதீன், மந்திரவாதி முகமது சலீம் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story
Share it