Theme Check

ஒரே கால்வாயில் 3 உடல்கள் மீட்பு.. அதிர்ச்சியில் மக்கள்..!

ஒரே கால்வாயில் 3 உடல்கள் மீட்பு.. அதிர்ச்சியில் மக்கள்..!

ஒரே கால்வாயில் 3 உடல்கள் மீட்பு.. அதிர்ச்சியில் மக்கள்..!
X

மகாராஷ்டிரா மாநிலம் ஷிண்டே வஸ்திக்கு அருகில் உள்ள கால்வாயில் இரண்டு உடல்கள் மிதப்பதாக நேற்று காலை 11:30 மணிக்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், கால்வாயில் மிதந்து கொண்டிருந்த உடல்களை மீட்டனர்.

மீட்கப்பட்ட இரண்டு உடல்களும் அழுகிய நிலையில் இருந்ததால் பல நாட்களுக்கு முன்னதாக இறந்திருக்கலாம் என்று தீயணைப்பு துறையினர் கூறினர்.

இதையடுத்து, சுமார் இரண்டு மணி நேரம் கழித்து, வைடுவாடி பகுதிக்கு அருகே அதே கால்வாயில் மேலும் ஒருவரின் உடல் மிதப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தீயணைப்பு துறையினர் அங்கு சென்று, அந்த உடலை மீட்டனர். இதையடுத்து, மூன்று உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தீயணைப்பு துறையினர் கூறுகையில், ‘ஏற்கனவே மீட்கப்பட்ட இரண்டு உடல்கள் சிதைந்து இருந்தது. ஆனால், மூன்றாவதாக எடுக்கப்பட்ட உடல் சமீபத்தில் இறந்திருக்கலாம்’ என்று தெரிவித்தனர்.

ஒரே கால்வாயின் வெவ்வேறு இடங்களில் இருந்து மூன்று உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Next Story
Share it