Theme Check

எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உடல் கருகி பலி!!

எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உடல் கருகி பலி!!

எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உடல் கருகி பலி!!
X

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜாம்வா ராம்கரில் எண்ணெய் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று திடீரென்று அந்த தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர்.

முன்னதாக அந்த தொழிற்சாலையின் பெயிண்ட் பொருட்கள் பேக்கிங் செய்யும் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இந்த சம்பவம் குறித்து நிருபர்களிடம் பெசிய ஜாம்வா ராம்கர் வட்ட அதிகாரி ஷிவ்குமார் பரத்வாஜ், “பெயிண்ட் செய்ய பயன்படுத்தப்படும் டர்பெண்டைன் ஆயில் பேக்கிங் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ​​தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

Next Story
Share it