Theme Check

இல்லத்தரசிகளுக்கு இலவசமாக 3 சிலிண்டர்கள்!!

இல்லத்தரசிகளுக்கு இலவசமாக 3 சிலிண்டர்கள்!!

இல்லத்தரசிகளுக்கு இலவசமாக 3 சிலிண்டர்கள்!!
X

தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி 3 இலவச சிலிண்டர் திட்டத்தை நடைமுறைப்படுத்த கோவா அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் 2ஆவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் எட்டு பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இதையடுத்து புதிய அமைச்சரவையின் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த ட்விட்டரில் பதிவிட்டுள்ள சாவந்த், புதிய நிதியாண்டு முதல், 3 இலவச சிலிண்டர் விநியோக திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது என தெரிவித்தார்.

goa

கோவா சட்டசபைத் தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு மூன்று எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது.

அதனை நிறைவேற்றும் வகையில் கோவா முதலமைச்சர் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதே போல் இரும்புத் தாது சுரங்க தொழிலை மீண்டும் ஊக்குவிப்பது மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்குவது ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப் போவதாகவும் கூறினார்.

newstm.in

Next Story
Share it