Theme Check

பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை.. முதல்வர் அதிரடி உத்தரவு..!

பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை.. முதல்வர் அதிரடி உத்தரவு..!

பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை.. முதல்வர் அதிரடி உத்தரவு..!
X

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு மகளிர் பியூ காலேஜில் கடந்த டிசம்பர் மாதத்தில் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக, கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து அந்த 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதுமட்டுமின்றி, கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாகக் கூறி, கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் முறையிட்டுள்ளனர். மேலும் பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், உடுப்பியிலுள்ள அரசு கலைக் கல்லூரியில் ஹிஜாப் அணிந்துகொண்டு மாணவிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

அதே போன்று குந்தபுராவிலுள்ள அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து செல்ல மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறு ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு தனி வகுப்பறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், காவி நிற துண்டை அணிந்து மாணவர்கள் ஒரு பிரிவினர், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருவதால் பல்வேறு இடங்களில் 144 தடை போடப்பட்டுள்ளது.

நிலைமை கட்டுக்கடங்காமல் செல்கிறது. இதனால் 3 நாட்களுக்கு அனைத்து உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட கர்நாடக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story
Share it