Theme Check

3 நாட்கள் வெப்ப அலை வீசும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

3 நாட்கள் வெப்ப அலை வீசும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

3 நாட்கள் வெப்ப அலை வீசும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
X

தலைநகர் டெல்லியில் அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘டெல்லியில் இன்று வெயில் அதிகமாக இருக்கும். 44 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது. வெப்பநிலை அதிகரிப்பினால் அனல் காற்று வீசக்கூடும் என மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

டெல்லியில் அதிகபட்சமாக, அக்சர்தம் கோவிலுக்கு அருகில் உள்ள விளையாட்டு வளாகத்தில் அமைந்துள்ள தானியங்கி வானிலை நிலையத்தில் 46.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

நஜாப்கர், முங்கேஷ்பூர், பிடம்புரா மற்றும் ரிட்ஜ் ஆகிய வானிலை மையங்களில் முறையே 46.4 டிகிரி செல்சியஸ், 46.2 டிகிரி செல்சியஸ், 45.8 டிகிரி செல்சியஸ் மற்றும் 45.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

ஜூன் 15 மற்றும் 16- ஆகிய தேதிகளில் வெப்பம் அதிகமாக இருக்கும். அதன்பின் வெப்பம் குறைய வாய்ப்பு உள்ளது’ என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story
Share it