Theme Check

3 நாட்கள் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு!

3 நாட்கள் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு!

3 நாட்கள் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு!
X

மத்தியப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் மூன்று நாட்கள் இரவு நேர ஊரடங்கு பிறப்பித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் நடுவில் குறையத் தொடங்கிய கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நோய் பரவல் வேகம் அதிகாமாக உள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் தான் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது. இந்நிலையில் இந்த ஆண்டும் இதே நேரத்தில் வைரஸ் பரவல் அதிகம் இருப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் இருந்தோ கொரோனா பரவல் மற்ற மாநிலங்களில் அதிகரித்து வருவதை புரிந்து கொள்ள முடியும்.

இந்நிலையில் மத்தியப்பிரதேசத்தில் போபால், இந்தூர் ஆகிய பகுதிகளில் மூன்று நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். அதே போல் மகாராஷ்டிராவில் இருந்து மத்தியப்பிரதேசம் வரும் அனைவருக்கும் கொரோனா சான்று கட்டாயம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே தமிழகம் உள்ள சில மாநிலங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it