Theme Check

நின்று கொண்டிருந்த லாரி மீது மினி வேன் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!!

நின்று கொண்டிருந்த லாரி மீது மினி வேன் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!!

நின்று கொண்டிருந்த லாரி மீது மினி வேன் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!!
X

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வாஞ்சூர் பகுதியை சேர்ந்த தீனா (28), மதன் குமார் (23), சரவணன் (19), ஜெகன் (26), கோபால கிருஷ்ணன் (16), சந்தோஷ் (23) ஆகியோர் தங்களுக்கு சொந்தமான 2 காளைகளை கிருஷ்ணகிரி அருகே மேல்மலை கிராமத்தில் நடைபெறும் மஞ்சுவிரட்டு போட்டியில் பங்கேற்க மினி வேனில் ஏற்றிச் சென்றனர்.

மினிவேனை அதேப் பகுதியை சேர்ந்த நாகராஜன் (23) ஓட்டிச் சென்றார். மஞ்சுவிரட்டில் பங்கேற்றவிட்டு 2 காளைகளை அதே வாகனத்தில் ஏற்றிக் கொண்டு டிரைவர் உள்பட 7 பேர் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

Vellore

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் அருகே பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மினி வேன் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் மினிவேன் டிரைவர் நாகராஜன் மற்றும் முன் பக்கம் அமர்ந்திருந்த தீனா, மதன் குமார் ஆகியோர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், மினி வேனில் பயணம் செய்த சரவணன், ஜெகன், கோபாலகிருஷ்ணன், சந்தோஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு கோபாலகிருஷ்ணன் சிகிச்சை பலனினறி இறந்தார். 2 காளைகள் லேசான காயத்துடன் உயிர் தப்பியது.

dead-body

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாணியம்பாடி துணைபோலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், நாட்டறம்பள்ளி இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story
Share it