Theme Check

தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சம்.. முன்பே எச்சரித்தோம் என ஐஐடி பேராசிரியர் விளக்கம் !!

தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சம்.. முன்பே எச்சரித்தோம் என ஐஐடி பேராசிரியர் விளக்கம் !!

தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சம்.. முன்பே எச்சரித்தோம் என ஐஐடி பேராசிரியர் விளக்கம் !!
X

இந்தியாவில் கொரோனாவின் தீவிரம் மிகக்கடுமையாக உள்ளது. நாள்தோறும் புதிய உட்சத்தில் கொரோனாவின் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதில் தமிழகமும் தப்பவில்லை. தற்போது நாள் ஒன்றுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது கடந்த ஆண்டு உச்சம் அடைந்த பாதிப்பைவிட 3 மடங்கும் அதிகமாகும்.

இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் புதிய அரசு அமைய உள்ளதால் கொரோனா பாதிப்பை எப்படி கையாளபோகிறது என்ற பரபரப்பு எழுந்துள்ளது. வடமாநிலங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க முடியாமலும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டாலும் அடுத்தடுத்து ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். இதனால் சடலங்களை எரிக்க இடம் கிடைக்காமல் பொது இடங்களில் வைத்து எரியூட்டும் நிலை தொடர்கிறது.

இதனிடையே, இந்தியாவில் மே மாத மத்தியில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருக்கும் என முன்பே மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாக ஐஐடி ஹைதராபாத் பேராசிரியர் வித்யாசாகர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், மே 15 முதல் 22 வரை தோராயமாக நாள் ஒன்றுக்கு 1.2 லட்சம் பேர் வரை கொரோனா தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்படலாம் என அரசிடம் தெரிவித்திருந்தோம். மார்ச் 13 அன்றே இந்தியாவில் நோய் தொற்று பரவல் அதிகரிக்க கூடும் என கணித்திருந்தோம். இருப்பினும் முறையான தரவுகள் இல்லாததால் கொஞ்சம் தாமதம் நேர்ந்தது. அதனால் முறையான தரவுகள் கிடைத்ததும் அதனடிப்படையில் ஆய்வு செய்ததில் இதை ஏப்ரல் 2 அன்று கண்டறிந்து தெரிவித்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தியாவில் தற்போது நாள் ஒன்றுக்கு 3.5 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in


Tags:
Next Story
Share it