3 திருமணம் செய்த பெண்.! நான் தான் குழந்தைக்கு தந்தை.. 4வது நபர் அதிரடி! நிஜமான வடிவேல் காமெடி..
3 திருமணம் செய்த பெண்.! நான் தான் குழந்தைக்கு தந்தை.. 4வது நபர் அதிரடி! நிஜமான வடிவேல் காமெடி..

ராமநாதபுரம் மாவட்டம் கோரவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது 8 மாத பெண்குழந்தையை விற்றுவிட்டதாக குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனால் குழந்தையுடன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க கவிதாவுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தனியாக வந்த பெண் கூறிய தகவல்களால் அதிகாரிகளே குழப்பமடைந்துள்ளனர்.
இந்த பெண்ணிற்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக அவரது சொந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு கட்டிட வேலைக்கு சென்ற அப்பெண்ணிற்கும் வினோத் என்ற இளைஞருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த கவிதாவின் கணவர், அவரை விவாகரத்து செய்துள்ளார். பின் வினோத்துடன் சேர்ந்து வாழ்ந்துவந்த நிலையில் அவரும் இறந்துவிடுகிறார். அதன்பிறகு நான்கே மாதங்களில் மாற்றுத் திறனாளி ஒருவரை ரேவதி 3 வதாக திருமணம் செய்கிறார். அடுத்த சில நாட்களிலேயே அவருக்கு பெண்குழந்தை ஒன்று பிறக்கிறது. ஆனால் அக்குழந்தை உயிரிழந்த வினோத் மூலமாக அவருடன் வாழ்ந்தப்போது பிறந்தது எனக்கூறி, அவரது உறவினர்களிடம் அப்பெண் ஒப்படைத்துவிட்டார்.
இந்தநிலையில் தற்போது நான்காவதாக ஒருவர் ரேவதிக்கு தன்மூலமாக தான் குழந்தை பிறந்ததாக அதை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். உத்திரகோசமங்கையைச் சேர்ந்த சரத் என்னும் வேல்முருகன் என்பவர் கொடுத்திருக்கும் புகாரில், வினோத் வெளிநாடு சென்ற நேரத்தில் ரேவதியுடன் தான் நெருக்கமாக இருந்ததாகவும் அதன்காரணமாகவே அவருக்கு குழந்தை பிறந்தது என தெரிவித்துள்ளார்.

ஆனால் அதை அதிரடியாக மறுக்கும் ரேவதி, அக்குழந்தை வினோத் மூலம் பிறந்தது தான் என கூறுகிறார். இதனால் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளே அதிர்ச்சி அடைந்துள்ளனர். குழந்தைக்கு மரபணு பரிசோதனை செய்த பிறகே அது யாருக்கு பிறந்தது என்கிற விபரம் தெரியவரும். இது ஒரு புறம் இருக்க தற்போது அப்பெண் மீண்டும் கர்ப்பம் தரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

