Theme Check

3 மாத கர்ப்பிணி தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு!!

3 மாத கர்ப்பிணி தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு!!

3 மாத கர்ப்பிணி தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு!!
X

அரியலூர் மாவட்டத்தில் 3 மாத கர்ப்பிணி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த அன்புமணி - சகுந்தலா (26) தம்பதிக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆனநிலையில் 8 மாத பெண் குழந்தை உள்ளது. தற்போது சகுந்தலா 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக குடும்பத்தில் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சகுந்தலா மர்மமான முறையில் தூக்கில் தொங்கியுள்ளார். இதனையடுத்து சகுந்தலாவின் உறவினர்கள் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

pregnant

சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் காவல்துறையினர் சகுந்தலாவின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த பெண் இறந்தது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it