கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடிக்க சென்ற 3 பேர் வெள்ளத்தில் சிக்கி மாயம்.!!

கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடிக்க சென்ற 3 பேர் வெள்ளத்தில் சிக்கி மாயம்.!!

கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடிக்க சென்ற 3 பேர் வெள்ளத்தில் சிக்கி மாயம்.!!
X

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே மதகுச்சாலை பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் ஆகாஷ் (24), மனோஜ் (22), ராஜேஷ் (22), கொளஞ்சிநாதன் (34) ஆகிய நான்கு பேரும் நேற்று மாலை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் திருவிடைமருதூர் அருகே உள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் நேற்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில், மீன்பிடித்த நால்வரும் அப்பகுதியில் உள்ள திட்டு ஒன்றில் சிக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து திட்டில் சிக்கிய நபர்கள் செல்போன் மூலம் உறவினர்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும் தகவல் அளித்தனர். தகவல் அறிந்து மக்கள் அப்பகுதிக்குச் செல்லும் முன்பே, நீரானது 4 பேரையும் சூழ்ந்து கொண்டது. இதில், கொளஞ்சிநாதன் என்பவர் அருகில் இருந்த நாணல் புல்களை பிடித்துக் கொண்டு நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.

water

இந்த சம்பவம் குறித்து அறிந்த திருவிடைமருதூர் வட்டாட்சியர் சந்தனவேல் மற்றும் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நீரில் தத்தளித்த கொளஞ்சிநாதனை பத்திரமாக மீட்டனர். மேலும் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் மூவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து படகு மூலம் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட கொளஞ்சிநாதன், உடனடியாக பந்தநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால், தற்போது நலமுடன் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

Kollidam

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்படுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதையும் மீறி நள்ளிரவில் கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடிப்பதற்காக சென்ற இளைஞர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்லணை முதல் அணைக்கரை வரை பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஊராட்சி நிர்வாகம் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கொள்ளிடம் ஆற்றின் தென்கரையான நமது மாவட்ட பகுதிகளில் கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

Next Story
Share it