முயல் வேட்டைக்கு சென்ற 3 பேர் மின் வேலியில் சிக்கி பலி!!
முயல் வேட்டைக்கு சென்ற 3 பேர் மின் வேலியில் சிக்கி பலி!!

திண்டிவனம் அருகே முயல் வேட்டைக்கு சென்றவர்கள் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வன்னிப்பேர் கிராமத்தைச் சேர்ந்த முருகதாஸ், சுப்ரமணி, வெங்கடேசன். ஆகிய மூவரும் நேற்று இரவு பிரம்ம தேசம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் முயல் வேட்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அப்பகுதியில் சடகோபன் என்பவரின் வாழை தோட்டம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த பிரம்மதேச போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மின்வேளியில் சிக்கி உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போலீஸார் நிலத்தின் உரிமையாளர் சடகோபன் என்பவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அவரது உறவினர்களிடையேயும், கிராமத்திலும், பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
newstm.in

