Theme Check

அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு..!!

அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு..!!

அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு..!!
X

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் அகவிலைப்படி உயர்வால், ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் பென்சன்தாரர்கள் பலன் அடைவர். ஜனவரி 1-ம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை உயர்த்தி வழங்கப்படும். நாட்டில் தற்போது எரிபொருள் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் அதிகரித்து இருக்கும் இந்த சூழலில், அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு இருப்பது ஆயிரக்கணக்கான ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு சற்று நிவாரணம் அளிப்பதாக அமைந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக அகவிலைப்படி உயர்வு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கடந்த ஜூலை 2021-ம் ஆண்டு மத்திய அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தி வழங்கியது.

Tags:
Next Story
Share it