Theme Check

வாடகைத் தாய்மார்களுக்கு 3 வருட காப்பீடு.. தம்பதிகளுக்கு மத்திய அரசு உத்தரவு..!

வாடகைத் தாய்மார்களுக்கு 3 வருட காப்பீடு.. தம்பதிகளுக்கு மத்திய அரசு உத்தரவு..!

வாடகைத் தாய்மார்களுக்கு 3 வருட காப்பீடு.. தம்பதிகளுக்கு மத்திய அரசு உத்தரவு..!
X

வாடகைத் தாய் ஒழுங்குமுறை விதிகளின்படி, வாடகைத் தாய் வழியாக குழந்தை பெற விரும்பும் தம்பதிகள் 36 மாத காலத்திற்கு வாடகைத் தாய்க்கு ஆதரவாக பொது சுகாதார காப்பீட்டை வாங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள விதிமுறைகளில், ‘காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனம் அல்லது முகவரிடமிருந்து 36 மாத காலத்திற்கு வாடகைத் தாய்க்கு ஒரு பொது சுகாதார காப்பீட்டை தம்பதியர் வாங்க வேண்டும்.

கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய பிரசவ சிக்கல்களால் ஏற்படும் அனைத்துச் சிக்கல்களுக்கும் அனைத்து செலவுகளையும் ஈடுகட்ட போதுமான தொகையாக அது இருக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1971-ம் ஆண்டின் மருத்துவ சட்டத்தின்படி வாடகைத் தாய், வாடகைத்தாய் முறையின் போது கருக்கலைப்புக்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it