தமிழகம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைப்பு.. தேர்தல் ஆணையர் முழு விளக்கம்
தமிழகம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைப்பு.. தேர்தல் ஆணையர் முழு விளக்கம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது. இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட காவலர்கள் 1.13 லட்சம் பேர் பணியில் ஈடுபட உள்ளனர். 2.83 கோடி வாக்களிக்க உள்ளனர்.
நீதிமன்ற உத்தரவுபடி சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. ஸ்ட்ராங் அறையிலும் வெளியிலும் காமிராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை, ஆவடி, தாம்பரம் ஆகிய 3 மாநகராட்சிகளின் 3 ஆணையர்கள், ஏடிஜிபிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களுக்கும் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 697 வட்டார பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

75% வாக்குகள் ஒரு நபருக்கு சென்றிருந்தாலோ, மையம் கைப்பற்றும் நடவடிக்கைகள் இருந்த மையங்களோ பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட சிறப்பு பார்வையாளராக நாகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். பதற்றமான வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதங்களை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
5 - 6 மணிவரை கொரோனா நோயாளிகள் பரிசோதனை சான்றிதழை காண்பித்து வாக்களிக்கலாம். கோவையில் 2700 காவலர்கள், 3 சிறப்பு கம்பெனி, அதிவிரைவு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாக்குப்பதிவு முடிந்த பிறகு அது தொடர்பான அறிக்கை மாநில தேர்தல் ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கம் செய்யப்படும்.

பறக்கும் படையினர் தரப்பில் இதுவரை இல்லாத வகையில் அதிகப்படியான தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. 11.89 கோடி இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 8.21 கோடி பணமாகவும், 1.13 கோடி மதுபானம்2.54 கோடி பொருட்களாக கைப்பற்றப்பட்டுள்ளது. நோட்டா பயன்படுத்த சட்ட விதிகள் இல்லை, என்று அவர் கூறினார்.
newstm.in

