ஆற்று வெள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 31 பேர் நீரில் மூழ்கி பலி.. அதிர்ச்சி வீடியோ !!
ஆற்று வெள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 31 பேர் நீரில் மூழ்கி பலி.. அதிர்ச்சி வீடியோ !!

திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றபோது பேருந்து ஆற்று வெள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 31 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
கென்யாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருவதால் நீர் நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதேபோல் நகரின் பல இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளதால் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளே முடங்கி கிடக்கின்றனர்.
இந்நிலையில் தலைநகர் நைரோபியில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தேவாலயம் ஒன்றின் பாடல் குழுவினர் பேருந்தில் சென்றுள்ளனர். அப்போது வழியில் உள்ள கிடுய் கவுண்டியில் உள்ள என்.சி.யு. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் ஆபத்தை உணராமல் ஆற்றை கடந்துசெல்ல வெள்ளத்தின் நடுவே அவர்கள் பேருந்தில் சென்றுள்ளனர். ஆனால், ஆற்றை கடக்க முயன்ற பேருந்து எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் கவிழ்ந்தது.
இதில் பேருந்தில் இருந்த 4 குழந்தைகள் உள்பட 31 பேர் வெள்ளத்தில் மூழ்கி பலியாகினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு 12 பேரை பத்திரமாக மீட்டனர். திருமண நிகழ்விற்கு சென்று உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
Few moments ago at Enziu River, these ones had dressed for some wedding event happening at Nuu Ward in Mwingi - Kitui County. I hope all of them got rescued. pic.twitter.com/o8XxiedF2q
— Kwale Gunner - #MadeInKenya 🇰🇪 (@Sam_Lulli) December 4, 2021
newstm.in