Theme Check

33 பேரால் பாலியல் பலாத்காரம்... 28 பேர் கைது !! 15 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் !

33 பேரால் பாலியல் பலாத்காரம்... 28 பேர் கைது !! 15 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் !

33 பேரால் பாலியல் பலாத்காரம்... 28 பேர் கைது !! 15 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் !
X

15 வயது சிறுமி ஒருவர் 30க்கும் மேற்பட்டவர்களால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் நடந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. டொம்பிவிலி காவல்நிலையத்தில் 3 நாட்களுக்கு முன்பு சிறுமி ஒருவர் தன்னை 30க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 9 மாதங்களாக பாலியல் வன்புணர்வு மற்றும் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து வந்ததாக புகார் அளித்தார்.

child

15 வயதாகும் அந்த சிறுமி அளித்த புகாரைகேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். புகாரில், கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதியன்று, நண்பர் ஒருவர் அச்சிறுமியை பலவந்தமாக பாலியல் வன்புணர்வு செய்த நிலையில் அதனை அவர் வீடியோவாகவும் எடுத்து வைத்திருக்கிறார். பின்னர் அந்த வீடியோவை வைத்து மிரட்டி அந்த நபர் சிறுமியை சில முறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

பின்னர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வீடியோவை அந்த நபர் தனது நண்பர்கள் சிலருக்கு பகிர்ந்த நிலையில், அவரின் நண்பர்களும், அவர்களுக்கு தெரிந்தவர்கள் என அச்சிறுமியை டொம்பிவிலி, பத்பாபுர், முர்பத் மற்றும் ரபேல் என மாவட்டத்தின் பல இடங்களுக்கு அச்சிறுமியை மிரட்டி வரவழைத்து கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர். ஒன்றல்ல, இரண்டல்ல இப்படியே 33 பேர் அந்த 15 வயது சிறுமியை நாசம் செய்திருக்கின்றனர்.

child

அந்த 33 பேரும் 16 முதல் 23 வயதுடையவர்கள், இதில் இருவர் மைனர்கள். சிறுமி அந்த 33 பேரின் பெயர்களையும் காவல்துறையினரிம் கூறியிருந்ததன் பேரில் அதில் 28 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர், எஞ்சியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கைதானவர்கள் மீது பாலியல் வன்புணர்வு, மீண்டும் மீண்டும் பாலியல் வன்புணர்வு செய்தல், கூட்டு பாலியல் வன்புணர்வு, 16 வயதுக்கு கீழ் இருப்பவர்களை பாலியல் வன்புணர்வு செய்தல் போன்ற பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

புகார் அளித்தாலும் அவர்களை கைது செய்ய போலீசார் சிறுமியின் குடும்பத்தினர் திட்டமிட்டனர். இதற்காக, ‘சமூக செயற்பாட்டாளர் ஒருவர் குற்றவாளிகளை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என திட்டம் தீட்டி, சிறுமியை மிரட்டி வந்தவர்களில் ஒருவரை சிறுமியை தொடர்பு கொள்ளச் செய்துள்ளார். அந்த நபர் சிறுமியை குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்த போது, சிறுமியின் குடும்பத்தினர் ஆட்டோவில் அவர்களை பிந்தொடர்ந்தனர்.

child

இந்த நேரத்தில் ஆட்டோ திடீரென பழுதாகி நின்றுவிட சிறுமி தனது இருப்பிட லொகேஷனை ஷேர் செய்த போது குடும்பத்தினர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் காவலர்கள் அங்கு செலவதற்குள் இருவர் அச்சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர். 15 வயது சிறுமிக்கு நடந்திருக்கும் இந்த அவலம் பதறவைப்பதாக உள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it