Theme Check

அரசுக்கு சொந்தமான 35 மதுபான கடைகள் தனியாருக்கு ஏலம்..!

அரசுக்கு சொந்தமான 35 மதுபான கடைகள் தனியாருக்கு ஏலம்..!

அரசுக்கு சொந்தமான 35 மதுபான கடைகள் தனியாருக்கு ஏலம்..!
X

தமிழகத்தில் மதுபான கடைகளை அரசு நிறுவனமான டாஸ்மாக் நடத்துகிறது. ஆனால் புதுச்சேரியில் தனியாரே நடத்துகின்றனர். அரசு நிறுவனமான பாப்ஸ்கோ சார்பில் 35 மதுபான கடைகள் மட்டுமே நடத்தப்படுகின்றன.

இந்த மதுக் கடைகளை தனியாருக்கு ஏலத்தில் விட்டு ரூ.200 கோடி வருவாய் ஈட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் வருகிற 2042 வரை, அதாவது 20 வருடங்களுக்கான டெண்டராக விடப்பட உள்ளது.

அதாவது புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தலா ஒரு சில்லறை மதுபான கடையும், புதுச்சேரியில் பார் வசதியுள்ள 31 கடைகளும், காரைக்காலில் 2 கடைகளும் ஏலம்விட திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கான விதிமுறைகளும் தயாரிக்கப்பட்டு அரசுக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு அரசின் அனுமதி கிடைப்பதற்குள் பாப்ஸ்கோ மதுபான கடைகள் தொடர்பான விவரங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதுதொடர்பாக பாப்ஸ்கோ வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘ஏலம் தொடர்பான அரசின் அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. அரசுக்கு அனுப்பப்பட்ட கோப்பில் உள்ள விவரங்கள் எப்படி வெளியானது என்பது தெரியவில்லை’ என்று தெரிவித்தனர்.

Next Story
Share it