13 வயது சிறுவனுக்கு 35 வயது பெண் பாலியல் தொல்லை.. இதுதான் சரியான தண்டனை !
13 வயது சிறுவனுக்கு 35 வயது பெண் பாலியல் தொல்லை.. இதுதான் சரியான தண்டனை !

சிவகங்கையில் 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 35 வயது பெண்ணிற்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் 1000 ரூபாய் அபராதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழச்சேவல்பட்டி அருகேவுள்ள ஆவனிப்பட்டி கிராமத்தில் உதயவள்ளி என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டு அருகே வசித்து வந்த 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். சிறுவனை தனியாக அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் உடனடியாக கீழச்சேவல்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் உதயவள்ளி மீது வழக்குப்பதிவு விசாரணை நடத்திய போலீசார் அவரை கைது செய்தனர்.
அந்த வழக்கானது சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிமன்றத்தில் உதயவள்ளி மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டு சிறைதண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பாபுலால் அதிரடி தீர்ப்பை வழங்கினார். இதனை தொடர்ந்து அவர் மதுரை மத்திய சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் பெண் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

