3500 வீரர்கள் உயிரிழப்பு.. உக்ரைன் ராணுவம் அறிவிப்பு..!
3500 வீரர்கள் உயிரிழப்பு.. உக்ரைன் ராணுவம் அறிவிப்பு..!

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய படைகளுக்கு அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, உக்ரைனை பல முனைகளில் இருந்து ரஷ்ய படைகள் தாக்கத் தொடங்கின.
தொடர்ந்து இன்று 3-வது நாளாக போர் நீடிக்கிறது. போரை முன்னிட்டு, இரு தரப்பிலும் ராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. வீரர்களின் உயிரிழப்பு பற்றியும் தகவல் வெளிவருகின்றன.
அந்தவகையில், உக்ரைனில் போர் நடத்தும் ரஷ்ய ராணுவத்தின் 3 ஆயிரத்து 500 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.
அத்துடன், ரஷ்யாவின் 102 போர் டாங்கிகள், 536 கவச வாகனங்கள், 15 பீரங்கிகள், 14 போர் விமானங்கள், 8 ஹெலிகாப்டர்களை வீழ்த்தி அழித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story

