Theme Check

இவர்களுக்கும் 365 நாட்களுக்கு மகப்பேறு விடுப்பு.. தமிழக அரசு விளக்கம்..!

இவர்களுக்கும் 365 நாட்களுக்கு மகப்பேறு விடுப்பு.. தமிழக அரசு விளக்கம்..!

இவர்களுக்கும் 365 நாட்களுக்கு மகப்பேறு விடுப்பு.. தமிழக அரசு விளக்கம்..!
X

அரசு பெண் ஊழியர்களுக்கு குழந்தை பிறந்த உடன் இறந்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு 6 மாதங்களாக இருந்த அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு 9 மாதங்களாக அதாவது 270 நாட்களாக உயர்த்தப்பட்டது.

இந்த விடுப்பை பிரசவத்துக்கு முன், பிரசவத்துக்கு பின் என பிரித்து எடுத்துக் கொள்ளவும், விடுப்பு காலத்தில் முழு சம்பளம் வழங்கவும் அனுமதிக்கப்பட்டது. அதன்பின், கடந்த ஆண்டு இந்த விடுமுறை கால அளவு ஒரு வருடமாக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், பிறந்தவுடன் குழந்தை எதிர்பாராத விதமாக இறந்தாலும் தாய்மார்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு தொடர்பாக எழுந்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, குழந்தை பிறந்து, பின் சிறிது காலத்திலேயே இறந்துவிட்டாலும் 365 நாட்களுக்கு மகப்பேறு விடுப்பு உண்டு என தெரிவித்துள்ளது.

Next Story
Share it