வாட்ஸ்அப் குழுவில் 3,00,000-க்கு ஏலம் விடப்பட்ட 3 நாளே ஆன பெண் குழந்தை..!!
வாட்ஸ்அப் குழுவில் 3,00,000-க்கு ஏலம் விடப்பட்ட 3 நாளே ஆன பெண் குழந்தை..!!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மருத்துவப் பயிற்சியாளர் மருத்துவர் ஆர்.எம்.பி.புஷ்பலதா. இவர் வாட்ஸ்அப் குழுவில் பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தையின் புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு 3 லட்சத்திற்கு விற்பனைக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அஜித்சிங் நகர் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது.
பெண் குழந்தையின் தாயான துர்கா, மருத்துவர் ஆர்எம்பி புஷ்பலதாவின் வீட்டு அருகே வசித்து வருகிறார். துர்காவிற்கு ஏற்கனவே 2 மகன்கள் உள்ளனர். மூன்றாவது குழந்தையும் ஆண் குழந்தையாக பிறந்தால், தனது கணவர் ஏற்கமாட்டார். எனவே குழந்தையை தத்தெடுப்பதற்கு விட்டுவிடுவதாக துர்கா ஆர்எம்பி புஷ்பலதாவிடம் ஏற்கனவே கூறியிருந்ததாக தெரிகிறது.

ஆனால், துர்காவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதை கவனிக்காமல் 3 நாளே ஆன பெண் குழந்தையை மருத்துவர்கள், புஷ்பலாதா மற்றும் அம்ருதா ஆகியோர் விற்க முயற்சித்துள்ளனர். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

