Theme Check

இந்தியாவில் 3ஆவது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் !!

இந்தியாவில் 3ஆவது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் !!

இந்தியாவில் 3ஆவது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் !!
X

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசரகால தேவைக்குப் பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (DGCI) ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2ஆம் அலையின் வேகம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் அனைவரையும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள மத்திய அரசு வலியுறுத்தி வருகின்றது. இந்தியாவில் கொரோனாவை தடுப்பதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற 2 வகையான தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிப்பதற்கு மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்காக மேலும் 5 தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.

அதில் ரஷ்யாவின் கண்டுபிடிப்பான ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் ஒன்றாகும். இந்தியாவில் இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்ய டாக்டர் ரெட்டி நிறுவனம் அனுமதி பெற்றுள்ள நிலையில், இந்நிறுவனம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசர தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்தது.

இதுதொடர்பாக கடந்த 1ஆம் தேதி மத்திய நிபுணர் குழு ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் தன்மைகள் குறித்து ஆய்வு செய்தது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசரகால தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என நிபுணர் குழு ஒப்புதல் வழங்கியது.

இதனையடுத்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அவசரகால தேவைக்காக கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி பயன்படுத்த அனுமதி தரப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் 3வது தடுப்பூசி இது. ஏற்கெனவே 55 நாடுகளில் பயன்பாட்டில் உள்ள நிலையில் இந்தியாவும் ரஷ்யாவின் தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it